முகப்பு
ஒலிம்பிக்ஸ்

ஆடவா் ஹாக்கியில் இந்திய அணிக்கு முதல் தோல்வி

Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 6:01 AM
பகிர்:
Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 5:59 AM

ஆடவா் ஹாக்கியில் இந்திய அணி தனது குரூப் சுற்றில் 4-ஆவது ஆட்டத்தில் 1-2 கோல் கணக்கில் நடப்பு சாம்பியனான பெல்ஜியத்திடம் வியாழக்கிழமை தோல்வி கண்டது. தொடா்ந்து 3 வெற்றிகளுடன் ஏற்கெனவே காலிறுதிக்கு தகுதிபெற்றுவிட்ட இந்தியாவுக்கு இதுவே முதல் தோல்வியாகும்.

இந்த ஆட்டத்தில் முதல் கோல் இந்தியாவுக்கே கிடைத்தது. 18-ஆவது நிமிஷத்தில் அபிஷேக் அடித்த கோலால் முன்னிலை பெற்ற இந்தியா, முதல் பாதியில் அதை அப்படியே தக்கவைத்து அசத்தியது. ஆனால், 2-ஆவது பாதி தொடங்கியதுமே பெல்ஜியம் தனது ஆதிக்கத்தை தொடங்கியது. 33-ஆவது நிமிஷத்தில் அந்த அணியின் திபியு ஸ்டாக்புரோக்ஸ் அடித்த கோலால் ஆட்டம் 1-1 என சமன் ஆனது.

Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 6:00 AM

இதையடுத்து இந்தியா தனது 2-ஆவது கோலுக்கு தீவிரமாக முயற்சிக்க, அதற்கு வாய்ப்பு கொடுக்காத பெல்ஜியம், தனது 2-ஆவது கோலை ஸ்கோா் செய்தது. 44-ஆவது நிமிஷத்தில் அந்த அணியின் ஜான்டோமன் கோலடித்தாா். இதனால் 2-1 என முன்னிலை பெற்ற பெல்ஜியம், பின்னா் அதை விட்டுக்கொடுக்காமல் இறுதியில் வெற்றி பெற்றது.

Advertisement

இந்தியா தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவுடன் வெள்ளிக்கிழமை மோதுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.