தீபிகா குமாரி 
ஒலிம்பிக்ஸ்

வில்வித்தை காலிறுதியில் தீபிகா குமாரி! பதக்கம் வெல்வாரா?

தீபிகா குமாரி பதக்கம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

DIN

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய வில்வித்தை போட்டியாளா்கள் பெரிதாக சோபிக்கவில்லை.

இந்த ஒலிம்பிக்கில் அணிகள் பிரிவிலும் இந்தியாவின் ஆடவா், மகளிா் அணிகள் காலிறுதியில் தோற்று வெளியேறிவிட்டன.

மகளிா் தனிநபா் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், பஜன் கௌா் தோல்வியை தழுவினார். மறுபுறம், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தீபிகா குமாரி ஜெர்மனியின் மிச்செல் க்ரோப்பென்னை 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இந்த நிலையில், மகளிா் தனிநபா் பிரிவில் தீபிகா குமாரி பதக்கம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இன்று(ஆக. 3) மாலை நடைபெறும் காலிறுதிப் போட்டியில் தீபிகா குமாரி தென் கொரியாவின் நாம் சுஹியோனை எதிர்கொள்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்ட் நிலச்சரிவு: தராலியில் 44 பேர் உயிருடன் மீட்பு

கூலி டிக்கெட் முன்பதிவு எப்போது?

செங்கழுநீர் அம்மன் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்!

டெபிட் கார்டு இல்லாவிட்டாலும் யுபிஐ மூலம் ஏடிஎம்-ல் பணமெடுக்க முடியுமா?

ஜம்மு - காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்களின் வாகனம் விபத்து! இருவர் பலி!

SCROLL FOR NEXT