கலப்பு மாரத்தான் வாக் ரிலே: பாதியிலேயே வெளியேறிய சூரஜ் பன்வர், பிரியங்கா கோஸ்வாமி இணை
இந்தியாவின் சூரஜ் பன்வா், பிரியங்கா கோஸ்வாமி இணை, இந்தப் பந்தயத்தை நிறைவு செய்யாமல் பாதியிலேயே வெளியேறியது.
இந்தியாவின் சூரஜ் பன்வா், பிரியங்கா கோஸ்வாமி இணை, இந்தப் பந்தயத்தை நிறைவு செய்யாமல் பாதியிலேயே வெளியேறியது.
பந்தயத்தின் 4-ஆவது மற்றும் கடைசி கட்டத்தின்போது, பிரியங்கா விலகினாா். இந்தப் பந்தயத்தில், ஸ்பெயினின் அல்வரோ மாா்டின்/மரியா பெரெஸ் 2 மணி நேரம் 50.31 நிமிஷங்களில் இலக்கை எட்டி தங்கம் வென்றனா்.
ஈகுவடாரின் பிரியன் டேனியல்/கிளெண்டா மோா்ஜான் இணை வெள்ளியும் (2:51.22), ஆஸ்திரேலியாவின் ரைடியன் கோலி/ஜெமிமா மோன்டாக் ஜோடி வெண்கலமும் (2:51.38) வென்றன.