முகப்பு
வினேஷ் போகத் - கஸ்மன் லோபஸ்
ஒலிம்பிக்ஸ்

மல்யுத்த இறுதிப்போட்டிக்கு கியூபா வீராங்கனை தகுதி! வினேஷ் போகத்திடம் வீழ்ந்தவர்!!

மல்யுத்த இறுதிப்போட்டிக்கு வினேஷ் போகத்திடம் தோல்வியடைந்த கியூப வீராங்கனை தகுதி!

ஒலிம்பிக்ஸ்

மல்யுத்த இறுதிப்போட்டிக்கு கியூபா வீராங்கனை தகுதி! வினேஷ் போகத்திடம் வீழ்ந்தவர்!!

மல்யுத்த இறுதிப்போட்டிக்கு வினேஷ் போகத்திடம் தோல்வியடைந்த கியூப வீராங்கனை தகுதி!

Updated On : 7 ஆகஸ்ட், 2024 at 12:54 PM
வினேஷ் போகத் - கஸ்மன் லோபஸ்
பகிர்:

பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியின் மகளிருக்கான 50வது எடைப்பிரிவு இறுதிப் போட்டிக்கு, வினேஷ் போகத்திடம் அரையிறுதியில் தோல்வியடைந்த கியூப வீராங்கனை தகுதி பெற்றுள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக் மகளிருக்கான மல்யுத்தப் போட்டியில் இறுதிக்கு முன்னேறியிருந்த இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அரையிறுதியில் தோல்வியடைந்த கியூபாவின் கஸ்மன் லோபஸ் யுஸ்னெலிஸ் தகுதி பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

மல்யுத்த இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை சாராவுடன் கியூபா வீராங்கனை கஸ்மன் மோதவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மகளிருக்கான 50 கிலோ எடைப்பிரிவில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் கியூபாவின் கஸ்மன் லோபஸ் யுஸ்னெலிஸை 5-0 என முற்றிலுமாக வீழ்த்தி இறுதிக்குத் தகுதி பெற்று, சாதனை படைத்திருந்தார்.

இறுதிப் போட்டிக்கு முன்னேறி வென்றால் தங்கம், தோற்றால் வெள்ளி என்று பதக்கத்தை உறுதி செய்திருந்த நிலையில்தான், உடல் எடை கூடுதலாக 100 கிராம் இருப்பதாகக் கூறி வினேஷ் போகத் போட்டியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

முதலில், தங்கப் பதக்கம் இறுதிக்குத் தகுதி பெற்ற அமெரிக்க வீராங்கனைக்கு வழங்கப்படும் என்றும், வெள்ளிப் பதக்கம் யாருக்கும் வழங்கப்படாது என்று கூறப்பட்டது. இந்நிலையில், அரையிறுதியில் வினேஷ் போகத்திடம் தோல்வி அடைந்த கியூபா வீராங்கனை இறுதிக்கு முன்னேறியிருப்பதாகக் கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →