தீக்‌ஷா தாகர் கோப்புப் படம்
ஒலிம்பிக்ஸ்

பாரீஸ் ஒலிம்பிக்: கோல்ஃப் போட்டியில் நம்பிக்கையளிக்கும் தீக்‌ஷா தாகர்!

பாரீஸ் ஒலிம்பித் தொடரில் கோல்ஃப் போட்டியில் நம்பிக்கையளிக்கும் விதமாக தீக்‌ஷா தாகர் சிறப்பான தொடக்கத்தை அளித்துள்ளார்.

DIN

பாரீஸ் ஒலிம்பித் தொடரில் கோல்ஃப் போட்டியில் நம்பிக்கையளிக்கும் விதமாக தீக்‌ஷா தாகர் சிறப்பான தொடக்கத்தை அளித்துள்ளார்.

2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் பெண்கள் பிரிவில் அதிதி அசோக், தீக்‌ஷா தாகர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இவர்களுக்கான முதல்சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் தீக்‌ஷா தாகர் சிறப்பாக விளையாடி 2வது இடத்தைப் பிடித்தார். அதிதி அசோக் சிறப்பாக விளையாடியிருந்தாலும் பட்டியலில் 10வது இடத்தைப் பிடித்தார்.

கோல்ஃப் போட்டியின் இரண்டாம் சுற்று ஆட்டம் நாளை (ஆக. 7) நடைபெறவுள்ளது. இதில் தீக்‌ஷா தாகர் பங்கேற்கிறார்.

ஒலிம்பிக் தரவரிசையில் அதிதி 24வது இடத்திலும், தீக்‌ஷா 40வது இடத்திலும் உள்ளனர்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அதிதி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

SCROLL FOR NEXT