அன்ஷு மாலிக்  படம் | ஒலிம்பிக் 2024
ஒலிம்பிக்ஸ்

பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம்: இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் தோல்வி!

இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் தோல்வியைத் தழுவினார்.

DIN

பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனையான அன்ஷு மாலிக் அமெரிக்க வீராங்கனையிடம் தோல்வியைத் தழுவினார்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் மகளிருக்கான மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக், அமெரிக்க வீராங்கனையான ஹெலனிடம் 2-7 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்று வெளியேறினார்.

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டு, பாரீஸ் ஒலிம்பிக்கில் மீண்டும் ஒருமுறை சரித்திரம் படைக்க காத்திருக்கும், நடப்பு சாம்பியனான நீரஜ் சோப்ரா, இன்று அவர் தங்கப் பதக்கம் அல்லது வெள்ளிப்பதக்கத்தை உறுதிசெய்வார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்திய ஆடவர் ஹாக்கி அணி, வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இன்று ஸ்பெயினை எதிர்கொள்ள இருக்கிறது.

2020 ஆம் ஆண்டு புதுதில்லியில் நடைபெற்ற 2020 ஆசிய மல்யுத்த போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்ட அன்ஷு மாலிக் வெண்கலப் பதக்கங்களில் ஒன்றை வென்றார். செர்பியாவின் பெல்கிரேடில் நடைபெற்ற தனிநபர் மல்யுத்த உலகக் கோப்பையிலும் பெண்கள் 57 கிலோ போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய மல்யுத்த வெற்றியாளர் போட்டியில் வினேஷ் போகத் மற்றும் திவ்யா கக்ரான் ஆகியோருடன் சேர்ந்து அன்ஷு மாலிக் தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் பலி !

காயத்தால் வெளியேறிய மெஸ்ஸி: பெனால்டியில் வென்ற இன்டர் மியாமி!

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

SCROLL FOR NEXT