20 வயதில் ஓய்வை அறிவித்த பராகுவே நீச்சல் வீராங்கனை!
பராகுவே நாட்டைச் சேர்ந்த 20 வயது நீச்சல் வீராங்கனை லுவானா அலோன்ஸா ஓய்வை அறிவித்துள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் அழகாக இருப்பதால் பிரச்னையை சந்தித்தவர் என்று ஊடகங்களில் பிரபலமானவர் பராகுவே நாட்டை சேர்ந்த 20 வயது நீச்சல் வீராங்கனை லுவானா அலோன்ஸா.
ஒலிம்பிக் கிராமத்தில் இவரது செயல்பாடுகள் மற்றவர்களை பாதித்ததாக கூறப்படுகிறது. அழகாக இருப்பதால் மற்றவர்களுக்கு கவனச் சிதறல் ஏற்படுவதால் ஒலிம்பிக் கிராமத்தை விட்டே வெளியேற்றியதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
ஆனால் இதை மறுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்த லுவானா அலோன்ஸா, “அப்படி எதுவும் நடைபெறவில்லை. வதந்திகளை பரப்பாதீர்கள்” எனக் கூறியிருந்தார்.
Advertisement
Advertisement
தவறான நடத்தை விதிமீறல்களால் ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக சில ஆங்கில ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகளீர் 100மீ. பட்டர்பிளை நீச்சல் போட்டியில் 0.24 நொடிகளில் அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்துள்ளார் லுவானா அலோன்ஸா.
2020 ஒலிம்பிக்கில் 17 வயதில் பங்கேற்ற லுவானா அலோன்ஸா 28ஆவது இடம் பிடித்து வெளியேறினார். தற்போது பாரீஸ் ஒலிம்பிக்கில் 6ஆம் இடம் பிடித்து வெளியேறினார்.
பராகுவே நாட்டில் 2004ஆம் ஆண்டு பிறந்த லுவானா அலோன்ஸா அந்நாட்டின் 100மீ பட்டர்பிளை நீச்சலில் தேசிய சாதனை தன் வசம் வைத்துள்ளார்.
ஒலிம்பிக்கில் தோல்வியுற்றதைத் தொடர்ந்து, “இதுதான் என்னுடைய கடைசி போட்டி. நீச்சல் போட்டியிலிருந்து ஒய்வு பெறுகிறேன்” என்று அதிர்ச்சியளித்தார்.
ஒரே வாரத்தில் தனது இன்ஸ்டாகிராம் கணக்கினை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 500ஆயிரத்தில் இருந்து 1 மில்லியன் (10 லட்சம்) ஆக உயர்ந்துள்ளது குறித்து வேடிக்கையாக பதிவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.