உள்ளூர் கிரிக்கெட், ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வை அறிவித்த முருகன் அஸ்வின்!
உள்ளூர் கிரிக்கெட், ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த தமிழ்நாடு வீரர் முருகன் அஸ்வினைப் பற்றி...
இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடிய தமிழக வீரரான முருகன் அஸ்வின் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான சுழற்பந்து வீச்சாளர் முருகன் அஸ்வின், புணே, மும்பை, தில்லி, பெங்களூரு பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
35 வயது முருகன் அஸ்வின் ஐபிஎல் தொடரில் இதுவரை 44 ஐபிஎல் போட்டிகளில் 35 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
Advertisement
Advertisement
இவர், உள்ளூர் போட்டிகளில் ரஞ்சி டிராபி, விஜய் ஹசாரே டிராபி அல்லது சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரிலும் விளையாடி வந்தார். 117 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 115 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
உள்ளூர் கிரிக்கெட்டில் அவர் தமிழ்நாடு, சண்டீகர் மற்றும் ஜம்மு - காஷ்மீர் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
ஐபிஎல், உள்ளூர் போட்டிகள் என அனைத்துவிதமாக கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முருகன் அஸ்வின் வெளியிட்டுள்ள பதிவில், “என்னுடைய ஆறு வயதில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியதிலிருந்து, கிரிக்கெட் மீது மிகுந்த விருப்பம் கொண்டிருந்தேன். இதுவரை எனது வாழ்க்கையில் கிரிக்கெட் பயணம் அற்புதமாக அமைந்திருக்கிறது.
எனது உள்ளூர் கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடரில் எனது பயணத்தையும் நிறைவு செய்ய நான் முடிவெடுத்துள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஐபிஎல் தொடரில் ரைஸின் புணே சூப்பர் ஜெயண்ட்ஸ், தில்லி டேர்டெவில்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எம்.எஸ். தோனி, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரோஹித் சர்மா போன்ற நட்சத்திர கிரிக்கெட் வீரர்களின் தலைமையில் விளையாடவும் எனக்கு ஐபிஎல் தொடர் வாய்ப்பளித்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Indian leg-spinner Murugan Ashwin announced his retirement from domestic cricket and the Indian Premier League (IPL) on Monday, bringing the curtain down on a career that saw him represent multiple IPL franchises and Tamil Nadu across formats.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.