உள்ளூர் கிரிக்கெட், ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வை அறிவித்த விஜய் சங்கர்!
உள்ளூர் கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக தமிழக வீரர் விஜய் சங்கர் அறிவித்துள்ளார்.
உள்ளூர் கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக தமிழக வீரர் விஜய் சங்கர் அறிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக விஜய் சங்கர் 12 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 77 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 4253 ரன்கள் மற்றும் 43 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 112 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 2790 ரன்கள் மற்றும் 73 விக்கெட்டுகளையும், 159 டி20 போட்டிகளில் விளையாடி 2583 ரன்கள் மற்றும் 38 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
புதிய வாய்ப்புகள் மற்றும் அதிகம் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதை கருத்தில்கொண்டு, உள்ளூர் கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வை அறிவிப்பதாக முடிவு செய்துவிட்டதாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகளுக்காக விஜய் சங்கர் விளையாடியுள்ளார். கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அவருக்கு அந்த சீசன் சிறப்பானதாக அமையவில்லை.
கடந்த சீசனைத் தொடர்ந்து நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் அவரை எந்தவொரு அணியும் ஏலத்தில் எடுக்காதது குறிப்பிடத்தக்கது.
Tamil Nadu player Vijay Shankar has announced his retirement from local cricket and the IPL.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.