ரீதிகா ஹூடா Ravi Choudhary
ஒலிம்பிக்ஸ்

காலிறுதியில் தோல்வியுற்றார் ரீதிகா ஹூடா! வெண்கலம் வாய்ப்பிருக்கிறது!

பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் ரீதிகா ஹூடா காலிறுதியில் தோல்வியுற்றார்.

DIN

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் ஆடவருக்கான 57 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில், வெண்கலப் பதக்கச் சுற்றில் அமன் ஷெராவத் 13- 5 என்ற புள்ளிகள் கணக்கில் பியூா்டோ ரிகோவின் டரியன் குரூஸை வீழ்த்தி அசத்தினாா்.

இதன் மூலம் அறிமுக ஒலிம்பிக்கிலேயே பதக்கம் வென்று அசத்தினார் அமன் ஷெராவத். இத்துடன் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளன.

இந்நிலையில் மல்யுத்தம் மகளீர் ஃபிரீஸ்டைலில் 76 கிலோ பிரிவில் மதியம் நடைபெற்ற ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் வெற்றி பெற்றார்.

காலிறுதியில் உலகின் நம்.1 வீராங்கனையான ஐபேரியுடன் மோதிய ரீதிகா ஹூடா, 1-1 என போராடி டை பிரேக்கரில் கடைசி நேரத்தில் தோல்வியை தழுவினார்.

ஆனால் இத்துடன் முடியவில்லை. ரெபெசேஜ் விதியின் படி ஐபேரி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றால் ரீதிகா ஹீடாவுக்கு வெண்கல பதக்க போட்டியில் விளையாட வாய்ப்புள்ளதும்.

இதற்கு முன்பாக இந்தியா இந்தமாதிரி இரண்டாம் வாய்ப்பில் 2008இல் சுஷில் குமார், யோகேஷ்வர் தத் 2012இல், சாக்‌ஷி மாலிக் 2016இல், பஜ்ரங் புனியா 2020 ஒலிம்பிக்கிலும் வெண்கலம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலேசியாவில் Jananayagan இசை வெளியீட்டு விழா | Cinema Updates | Dinamani Talkies

நிக்கி கல்(யாண) ராணி!

உடைந்து அழுத சான்ட்ரா... பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

ஜிலேபியா, டோனட்டா, எது மிகவும் மோசம் தெரியுமா?

மீண்டும் பிரசாரத்தைத் தொடங்கும் இபிஎஸ்: நவ.30-ல் கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT