ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக் மல்யுத்தம்: வினேஷ் போகத் விவகாரம் -ஆக. 13இல் தீர்ப்பு!

தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

DIN

பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் மல்யுத்தத்தில் மகளிருக்கான 50 கிலோ எடை பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். அவர் தொடர்ந்துள்ள மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இறுதித்தீர்ப்பு வழங்கப்படுவதற்கான கால அவகாசத்தை செவ்வாய்க்கிழமை(ஆக. 13) வரை சர்வதேச விளையாட்டு நீதிமன்றம் நீட்டித்துள்ளது. இதன் காரணமாக, வினேஷ் போகத்துக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புக்கான விடை தெரிய மேலும் இரு நாள்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடி - டிரம்ப் நட்புக்கு அர்த்தம் இல்லை: காங்கிரஸ் விமரிசனம்

டாஸில் 15-0 தோல்வி... இந்திய கேப்டன் கூறியதென்ன?

கிராமங்களில் சிறு, குறு கடைகளுக்கு உரிமம் தேவையில்லை! - தமிழக அரசு

சீன தலைநகரில் கடும் வெள்ளம்: 80,000 பேர் வெளியேற்றம்! இருளில் மூழ்கிய 136 கிராமங்கள்!

அதிக ரிஸ்க், அதிக பலன்... காயம் குறித்து பென் ஸ்டோக்ஸ்!

SCROLL FOR NEXT