பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் அர்ஜூன் பபுதா படம்: எக்ஸ்
ஒலிம்பிக்ஸ்

துப்பாக்கி சுடுதலில் பதக்கத்தை தவறவிட்டார் அர்ஜுன் பபுதா!

பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கத்தை தவறவிட்டார் இந்திய வீரர் அர்ஜுன்.

DIN

பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அர்ஜுன் பபுதா பதக்கத்தை தவறவிட்டார்.

துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் நேற்று வெண்கலம் வென்றிருந்த நிலையில், ஆண்கள் பிரிவில் இறுதிப்போட்டியில் நுழைந்த அர்ஜுன் பதக்கத்தை பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அவருக்கு 0.9 புள்ளி வித்தியாசத்தில் பதக்க வாய்ப்பு பறிபோனது.

2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆண்கள் பிரிவில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அர்ஜுன் பபுதா இறுதிச்சுற்றில் இன்று (ஜூலை 29) விளையாடினார்.

நான்காவது சுற்றில் நூழிலையில் தவறியதால் 208.4 புள்ளிகளை அவர் பெற்றார். ஜெர்மனியை சேர்ந்த மிரான் மரிசிச் 209.8 புள்ளிகளைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை தட்டிச்சென்றார்.

இப்பிரிவில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விக்டர் லின்கிரென் 251.4 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார். சீனாவைச் சேர்ந்த லிஹாஹோ ஷேங் 252.2 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றார்.

துப்பாக்கி சுடுதல் போட்டியில் மற்றொரு இந்திய வீராங்கனை ரமிதா ஜிந்தால் பெண்கள் பிரிவின் ஆட்டத்தை நிறைவு செய்தார். அவர் பட்டியலில் 7வது இடத்தைப் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார்.

துப்பாக்கி சுடுதல் கலப்பு பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஆகியோர் வெண்கலம் வெல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இவர்கள் பங்குபெறும் ஆட்டம் நாளை (ஜூலை 30) நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புரசைவாக்கம், சைதாப்போட்டையில் அமலாக்கத் துறை சோதனை

சூப்பர் 4 சுற்றில் இந்தியா உடன் மோதும் பாகிஸ்தான்..! எகிறும் எதிர்பார்ப்பு!

தொடர்ந்து ஏற்றத்தில் பங்குச் சந்தை! 25,500-யை நெருங்கும் நிஃப்டி!!

பாகிஸ்தான் - செளதி ஒப்பந்தத்தின் தாக்கம் குறித்து ஆய்வு! வெளியுறவு அமைச்சகம்

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT