களைகட்டியது ஐபிஎல்: ஒரே நாளில் இரு அதிவேக அரை சதங்கள்! (விடியோக்கள்)
14 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் அரைசதம் எட்டி, ஐபிஎல் போட்டியில் அதிவேக (14 பந்துகள்) அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை...
ஸ்பெஷல்களைகட்டியது ஐபிஎல்: ஒரே நாளில் இரு அதிவேக அரை சதங்கள்! (விடியோக்கள்)
14 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் அரைசதம் எட்டி, ஐபிஎல் போட்டியில் அதிவேக (14 பந்துகள்) அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை...
ஒரே நாளில் ஐபிஎல் போட்டியில் இரு அதிவேக அரை சதங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த வருட ஐபிஎல் போட்டி அமர்க்களமாகத் தொடங்கியுள்ளது.
ஐபிஎல் போட்டியின் 3-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தியது.
கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூரு 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா 18.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து வென்றது.
கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக சுனில் நரைன் 17 பந்துகளில் 4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உள்பட 50 ரன்கள் எடுத்தார். இதனால் ஆட்ட நாயகன் விருதை அவர் பெற்றார்.
2-வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வென்றது. பஞ்சாப் மாநிலம் சண்டீகரில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பஞ்சாப் 18.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து வென்றது.
பஞ்சாப் அணியில் தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் அபாரமாக ஆடி அருமையான தொடக்கத்தை ஏற்படுத்தினார். 14 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் அரைசதம் எட்டி, "ஐபிஎல் போட்டியில் அதிவேக (14 பந்துகள்) அரைசதம் அடித்த வீரர்' என்ற பெருமையை பெற்றார். முன்னதாக, கொல்கத்தா வீரர் இர்ஃபான் பதான் 15 பந்துகளில் அரைசதம் எட்டியதே விரைவானதாக இருந்தது. 51 ரன்களுக்கு ஆட்டமிழந்த ராகுல் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.