ஸ்பெஷல்

கிறிஸ் லின் அதிரடி: பஞ்சாப்புக்கு 192 ரன்கள் வெற்றி இலக்கு

முதல் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்துள்ளது.

Raghavendran

11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகளின் 18-ஆவது லீக் ஆட்டம் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. 

இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்துள்ளது.

அதிகபட்சமாக துவக்க வீரர் கிறிஸ் லின் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 74 ரன்கள் விளாசினார். கேப்டன் தினேஷ் கார்த்திக் 43, ராபின் உத்தப்பா 34 ரன்கள் சேர்த்தனர்.

பஞ்சாப் தரப்பில் பரிந்தர் ஸ்ரண், ஆண்ட்ரூ டை ஆகியோர் 2 விக்கெட்டுகளும், அஸ்வின், முஜீப்-உர்-ரஹ்மான் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மண்டல அலுவலா்கள், பறக்கும் படை நிலையான கண்காணிப்பு குழுவினருக்கான பயிற்சி கூட்டம்

பிரதமா் மோடி இன்று இஸ்ரேல் பயணம்!

புற்றுநோய் மரபணு வரைபடம்!

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலை மறியல் வழக்கின் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது: கிராம மக்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT