ஸ்பெஷல்

100-ஆவது போட்டிக்கு கேப்டனாகும் கோலி: சென்னைக்கு எதிராக முதல் பேட்டிங்

இப்போட்டியின் மூலம் விராட் கோலி தனது 100-ஆவது டி20 போட்டிக்கு கேப்டனாக செயல்படுகிறார்.

Raghavendran

ஐபிஎல் 11-ஆவது சீசன் 24-ஆவது லீக் ஆட்டம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் புதன்கிழமை நடைபெறுகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி, பந்துவீச்சை தேர்வு செய்தார்.

போட்டி நடைபெறும் பெங்களூரு நகரில் காலை முதல் அவ்வப்போது மழை பெய்து வருவாதல், போட்டி நடைபெறும் நேரத்திலும் மழைக்கு வாய்ப்பிருக்கும் என்று கருதப்படுகிறது.

சிஎஸ்கே அணிக்கு எதிராக ஆர்சிபி கேப்டன் விராட் கோலி 19 இன்னிங்ஸ்களில் 706 ரன்கள் சேர்த்துள்ளார். சராசரி 44.13, அதிகபட்சம் 73. இதில் 6 அரைசதங்கள் அடங்கும்.

ஆர்சிபி அணிக்கு எதிராக சிஎஸ்கே கேப்டன் தோனி 22 இன்னிங்ஸ்களில் 608 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 32.00, அதிகபட்சம் 70 நாட்-அவுட். இரு அரைசதங்கள் எடுத்துள்ளார்.

இப்போட்டியின் மூலம் விராட் கோலி தனது 100-ஆவது டி20 போட்டிக்கு கேப்டனாக செயல்படுகிறார். மேலும் இந்த மைல்கல்லை எட்டும் 8-ஆவது வீரர் ஆவார். 244 போட்டிகளுடன் தோனி முதலிடத்திலும், 170 போட்டிகளுடன் கம்பீர் 2-வது இடத்திலும் உள்ளனர்.

இரு அணி வீரர்களின் விவரம் பின்வருமாறு:

ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, சாம் பில்லிங்ஸ், எம்.எஸ்.தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், இம்ரான் தாஹீர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி (கேப்டன்), ஏபி டி வில்லியர்ஸ், மண்தீப் சிங், கோரி ஆண்டர்சன், காலின் டி கிராண்ட்ஹோமி, வாஷிங்டன் சுந்தர், பவன் நேகி, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், சாஹல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெப்பிலியில் ரூ.16 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

பிரணவ், அா்ஜுன் வெற்றி; குகேஷ், பிரக்ஞானந்தா ‘டிரா’

துறையூா், புத்தனாம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை

பெண்ணுக்கு வீட்டில் பிரசவம்: கிராம செவிலியா் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை

மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தீா்க்க அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

SCROLL FOR NEXT