ஸ்பெஷல்

தில்லி அணியின் முக்கிய வீரர் வெளியேறினார்; புதிய வீரர் தேர்வு!

தில்லி அணியைச் சேர்ந்த கிறிஸ் மோரிஸ் காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்...

எழில்

தில்லி அணியைச் சேர்ந்த கிறிஸ் மோரிஸ் காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார். 

தில்லி அணி இந்த வருடம் தக்கவைத்துக்கொண்ட ஒரே வீரர், தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டரான கிறிஸ் மோரிஸ். அவருடைய ஊதியம் - ரூ. 7.10 கோடி. 

4 ஆட்டங்களில் விளையாடியுள்ள மோரிஸ், 3 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். எகானமி - 10.21. பேட்டிங்கில் 46 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 176.92. எனினும் அவர் காயம் காரணமாக இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

இதையடுத்து தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளரான ஜூனியர் டாலாவைத் தேர்வு செய்துள்ளது தில்லி அணி. 28 வயது டாலா, இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமாகி தன்னுடைய அற்புதமான வேகப்பந்துவீச்சினால் அனைவரையும் கவர்ந்தார். 3 டி20 ஆட்டங்களில் 7 விக்கெட்டுகள் எடுத்தார். எகானமி - 9.16.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை, 26 மாவட்டங்களில் இன்று மழை! நவம்பர் இறுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை?

பிலிப்பின்ஸை புரட்டிப்போட்ட கேல்மெகி புயல்: 66 பேர் பலி!

மம்மூட்டிக்கு கொடுக்கும் அளவிற்கு தேசிய விருதுகள் தகுதியானவை அல்ல: பிரகாஷ் ராஜ்

கார்குழல் கடவையே... மாளவிகா மேனன்!

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

SCROLL FOR NEXT