ஸ்பெஷல்

தோனியால் கேப்டன்களுக்கு தான் சிக்கல்: டூ பிளெஸிஸ்

தோனியின் அதிரடி ஆட்டத்தால் கேப்டன்களுக்கு தான் சிக்கல் என சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் டூ பிளெஸிஸ் தெரிவித்துள்ளார்.

Raghavendran

தோனியின் அதிரடி ஆட்டத்தால் கேப்டன்களுக்கு தான் சிக்கல் என சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் டூ பிளெஸிஸ் தெரிவித்துள்ளார்.

11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரில் 2 வருட தடைக்குப் பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குறிப்பாக கேப்டன் தோனியின் ஆட்டம் அதிரடியாக உள்ளது. இதுகுறித்து டூ பிளெஸிஸ் கூறியாதவது:

மகேந்திர சிங் தோனி சிறப்பான ஆட்டத்திறனுடன் விளங்குகிறார். எனவே அவருக்கு பந்துவீசுவது மிகவும் கடினமானது. அதிலும் தற்போது உள்ள இந்த அதிரடி ஆட்டத்திறனில் பந்துவீச்சாளருக்கு எப்படி பந்துவீசுவது என்று தெரியாமல் திகைத்து நிற்பர். தோனியின் இந்த ஆட்டத்திறனால் எதிரணி கேப்டன்களுக்கு தான் அதிக பாதிப்பு.

ஏனெனில் தோனிக்கு எதிராக எந்த யுத்தியை பயன்படுத்துவது என்று தெரியாமல் குழம்பி நிலையில் இருப்பார்கள். பந்தினை எந்த திசையில் வீசினாலும் அதை விளாசும் திறன் படைத்தவர். பந்தை மைதானத்தின் எந்த திசையில் வேண்டுமானாலும் விளாசித் தள்ளக் கூடிய வல்லமை படைத்தவர். மேலும் எந்த பந்தை எந்த திசையில் அடிக்க வேண்டும் என்பதை சரியாக கணித்து, அதற்கு ஏற்றமாதிரி தனது ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணிமேகலை விருது பெற்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

அந்தமான்: 7 பேருடன் சென்ற ஹெலிகாப்டா் கடலில் விழுந்து விபத்து

இந்தியா-இஸ்ரேல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு தொடக்கம்

குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு

ஒய்எஸ்ஆா் காங். ஆட்சியில் 60 லட்சம் கிலோ கலப்பட நெய் மூலம் திருப்பதி லட்டு தயாரிப்பு: சந்திரபாபு நாயுடு

SCROLL FOR NEXT