ஐபிஎல்: ராஜஸ்தான் பேட்டிங்!
பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இன்று மோதுகின்றன...
பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இன்று மோதுகின்றன.
புள்ளிகள் பட்டியலில் கொல்கத்தா 5-வது இடத்திலும், ராஜஸ்தான் 6-வது இடத்திலும், 12 புள்ளிகளுடன் உள்ளன. இந்த முக்கியமான ஆட்டத்தில் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் போட்டி நடைபெறுவது நைட்ரைடர்ஸ் அணிக்கு கூடுதல் சாதகமான அம்சமாகும்.
டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. சாவ்லாவுக்குப் பதிலாக மாவி, கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ளார். ராஜஸ்தான் அணியில் இஷ் சோதி, ராகுல் திரிபாதி, அனுரீத் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.