ஸ்பெஷல்

பந்து 85 மீட்டரைத் தாண்டிச் சென்றால் 8 ரன்கள்: பிரபல வீரர் கோரிக்கை!

கிறிஸ் கெயில் உள்ளிட்ட வீரர்கள் அடிக்கும் பந்து நீண்ட தூரம் சென்று விழுவதை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்...

எழில்

பிரபல ஆஸி. முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ், டி20 கிரிக்கெட் விதிகளில் புதிய திருத்தம் ஒன்றை மேற்கொள்ள கிரிக்கெட் நிர்வாகிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

டி20 ஆட்டங்களில் 85 மீ.க்கு மேல் செல்லும் பந்துகளுக்கு சிக்ஸ் வழங்கப்படுவதற்குப் பதிலாக 8 ரன்கள் வழங்கவேண்டும் என்பது அவருடைய கோரிக்கை. இதுபற்றி அவர் கூறியதாவது:

இன்றைய ரசிகர்களுக்கு ஏற்றாற்போல் விதிமுறைகள் மாற்றப்படவேண்டும். தொழில்நுட்பத்தில் நாம் நன்கு வளர்ச்சி கண்டுள்ளதால், டி20 கிரிக்கெட் போட்டிகளில் 85 மீட்டருக்கு மேல் பறந்து செல்லும் பந்துக்கு வழக்கமான ஆறு ரன்கள் வழங்காமல் 8 ரன்கள் வழங்க வேண்டும்.

கிறிஸ் கெயில் உள்ளிட்ட வீரர்கள் அடிக்கும் பந்து நீண்ட தூரம் சென்று விழுவதை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். கோல்ப் விளையாட்டில் 350 மீட்டர் தூரம் அடிக்கும் டைகர் வுட்ஸ் உள்ளிட்ட வீரர்களை ரசிகர்கள் மிகவும் விரும்புகிறார்கள். 

ஆட்டம் பரபரப்பான கட்டத்தில் இருக்கும்போது, எட்டு ரன்கள் தேவைப்படும்போது கெய்ல், ரஸ்ஸல், பொலார்ட் போன்ற வீரர்கள் ஆடுகளத்தில் இருக்கவேண்டும் என்று ரசிகர்கள் விரும்புவார்கள்.

இவ்வாறு சொல்லும் டீன் ஜோன்ஸ், இதுகுறித்து வரலாற்றிலிருந்து ஒரு குறிப்பை உதவிக்கு எடுத்துக்கொள்கிறார். 

1870களில், 1880களின் தொடக்கத்தில் குறிப்பிட்ட எல்லையைத் தாண்டினால் 5 ரன்கள் என்றும் மைதானத்தைத் தாண்டி பந்து விழுந்தால் 6 ரன்கள் என்றும் விதிமுறைகள் இருந்தன. 1898-ல் ஆஸ்திரேலியாவின் ஜோ டார்லிங் முதல் சிக்ஸரை அடித்தார். அவர் அடித்த பந்து மைதானத்துக்கு வெளியே சென்று விழுந்தது. 

1910-ல் இந்த விதிமுறை மாற்றப்பட்டு, எல்லைக்கோட்டைத் தாண்டிச் சென்றால் ஆறு ரன்கள் என்று புதிய நடைமுறை அமலுக்கு வந்தது. எனவே இந்த விளையாட்டின் ஒவ்வொரு விதிமுறையும் அவ்வப்போது மாற்றப்பட்டே வருகிறது. கிரிக்கெட் ஆடுகளத்தின் நீளத்தைத் தவிர இதர எல்லா விதிமுறைகளும் காலத்துக்கு ஏற்றாற்போல் மாற்றப்பட்டுள்ளன என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ட்ரோன்களில் இந்தியாவின் உதிரி பாகங்கள்: உக்ரைன் குற்றச்சாட்டு

கொல்லப்பட்ட ஆர்வலரின் உடலை ஒப்படைக்க மறுக்கும் இஸ்ரேல்! 6 நாள்களாக உண்ணாவிரதத்தில் பெண்கள்!

உத்தராகண்ட்டில் மேக வெடிப்பு: அதி கனமழை, வெள்ளப்பெருக்கில் ராணுவ வீரர்கள் மாயம்!

ஆக. 21 மதுரையில் TVK மாநில மாநாடு: Vijay அறிவிப்பு | செய்திகள் சில வரிகளில் | 05.08.25

அனல் பறக்கும் கலைப்படைப்பு... பைசன் படத்தைப் புகழ்ந்த தயாரிப்பாளர்!

SCROLL FOR NEXT