ஸ்பெஷல்

அரைசதம் கடந்த பிருத்வி ஷா: கவாஸ்கர், கங்குலிக்கு இணையாக அரிய சாதனை!

 2-ஆவது டெஸ்டில் அவரது 2-ஆவது இன்னிங்ஸில் அரைசதம் கடந்து புதிய மைல்கல்லை எட்டினார். 

Raghavendran

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய அந்த அணி தனது முதல் இன்னிங்ஸில் 101.4 ஓவர்களில் 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

அதிரடியாக ஆடிய ரோஸ்டன் சேஸ் 106 ரன்கள் குவித்தார். இந்திய தரப்பில் உமேஷ் யாதவ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. இதில் இளம் துவக்க வீரர் பிருத்வி ஷா மற்றொரு சாதனையைப் படைத்தார்.

அறிமுகமான முதல் டெஸ்டிலேயே (முதல் இன்னிங்ஸில்) சதமடித்தார். இப்போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது 2-ஆவது டெஸ்டில் அவரது 2-ஆவது இன்னிங்ஸில் அரைசதம் கடந்து புதிய மைல்கல்லை எட்டினார். அதிரடியாக ஆடிய பிருத்வி ஷா 53 பந்துகளில் 11 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட 70 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். 

இதன்மூலம் இந்திய அணிக்காக முதல் இரு இன்னிங்ஸ்களில் அரைசதம் கடந்தவர்கள் பட்டியலில் இடம்பிடித்தார். அதன் விவரம் பின்வருமாறு:

  • திலாவர் ஹூசைன்
  • ஏ.ஜி. கிருபால் சிங்
  • சுனில் கவாஸ்கர்
  • சௌரவ் கங்குலி
  • ராகுல் டிராவிட்
  • சுரேஷ் ரெய்னா
  • ரோஹித் ஷர்மா
  • பிருத்வி ஷா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்றைய ராசி பலன்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமித்தவா் மீது நடவடிக்கை : கோட்டாட்சியரிடம் மனு

திருவள்ளூா்: 10.43 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: நலவாரியத் தலைவா் வழங்கினாா்

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலுக்கு 108 பால்குட ஊா்வலம்

SCROLL FOR NEXT