ஸ்பெஷல்

ஒருநாள் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேனாக தோனியின் சிறந்த தருணங்கள் 

ஒருநாள் ஆட்டங்களில் 9 முறை இலக்கை சிக்ஸருடன் முடித்துள்ளார்...

எழில்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகக் கடந்த சனிக்கிழமையன்று அறிவித்தார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் பல மகத்தான சாதனைகளைப் புரிந்துள்ளார் தோனி. டி20 உலகக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை என மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன், தோனி மட்டுமே.

ஒருநாள் கிரிக்கெட்டில் 350 ஆட்டங்களில் விளையாடி, 10,773 ரன்களுடன் 10 சதங்களும் 73 அரை சதங்களும் எடுத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 229 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

இந்நிலையில் ஒருநாள் பேட்ஸ்மேனாக தோனியின் சிறந்த தருணங்கள் என இவற்றைக் கூறலாம்.

எந்த அணியுடன் அதிக ரன்கள்?: இலங்கை, 53 இன்னிங்ஸில் 2383 ரன்கள், சராசரி 64.40
அதிக ரன்கள் எடுத்த வருடம்: 2009, 1198 ரன்கள் 24 இன்னிங்ஸ், சராசரி 70.47
எந்த பந்துவீச்சாளருக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்தார்?: முரளிதரன், 20 இன்னிங்ஸில் 268 ரன்கள், சராசரி 134.00
அதிக ரன்கள் எடுத்த பேட்டிங் நிலை: 6-வது நிலை, 129 இன்னிங்ஸில் 4164 ரன்கள், சராசரி 47.31
அதிக ரன்கள் எடுத்த மைதானம்: மிர்புர், டாக்கா, 14 இன்னிங்ஸில் 591 ரன்கள், சராசரி 65.66
அதிக ரன்கள் எடுத்த போட்டி: சிபி சீரீஸ், 2008 9 இன்னிங்ஸில் 347 ரன்கள், சராசரி 69.40
அதிக ரன்கள் எடுத்த கூட்டணி: ரெய்னாவுடன், 73 இன்னிங்ஸில் 3585 ரன்கள், சராசரி 56.90
எந்த வருடத்தில் அதிக பேட்டிங் சராசரி வைத்திருந்தார்?: 40-வது ஒருநாள் ஆட்டத்துக்குப் பிறகு 2006-ல் 54.58.
சிக்ஸர்கள்: 229 சிக்ஸர்கள் அடித்து இந்திய அளவில் 2-ம் இடம், உலக அளவில் 5-வது இடம். 
இலக்கை சிக்ஸருடன் முடித்தது: ஒருநாள் ஆட்டங்களில் 9 முறை இலக்கை சிக்ஸருடன் முடித்துள்ளார் தோனி. இந்தப் பெருமை வேறு எந்த வீரருக்கும் கிடையாது.
நாட் அவுட்கள்: ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக இலக்கை விரட்டியபோது 47 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். இதுவும் ஒரு சாதனை. அடுத்ததாக, ஜாண்டி ரோட்ஸ், 33 முறை இதுபோல ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரூ.62 லட்சம் அபராதம் விதிப்பு!

AVATAR - Fire and Ash - Review | உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? | James Cameron

அரசனில் இணைந்த டூரிஸ்ட் ஃபேமிலி நடிகை!

கடைசி டி20: திலக் வர்மா, பாண்டியா அதிரடியால் தென்னாப்பிரிக்காவுக்கு 232 ரன்கள் இலக்கு

SCROLL FOR NEXT