செய்திகள்

மும்பை டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார் நடுவர் பால் ரீஃபெல்!

DIN

மும்பையில் நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின்போது, ஃபீல்டிங்கில் ஈடுபட்டிருந்த புவனேஸ்வர் குமார் எறிந்த பந்து தலையில் பட்டதில் களத்தில் இருந்த நடுவர் பால் ரீஃபெல் காயமடைந்தார். இதையடுத்து அவர் மும்பை டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் தொடர்ந்தபோது, நடுவர் பால் ரீஃபெல் களத்தில் இருந்தார். அப்போது, இங்கிலாந்து வீரர் லெக் சைடில் அடித்த பந்தை பிடித்த புவனேஸ்வர் குமார், அதை ஸ்டம்பை நோக்கி எறிந்தார். அந்தப் பந்து நடுவர் பால் ரீஃபெல் தலையின் பின்புறத்தில் பட்டது. இதில் நிலைகுலைந்து அவர் கீழே விழுந்தார். இதையடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டு, மருத்துவக் குழுவினர் களத்துக்கு வந்து ரீஃபெலை சிகிச்சை மற்றும் ஓய்வுக்காக அழைத்துச் சென்றனர்.

பின்னர், 3-ஆவது நடுவராகச் செயல்பட்டு வந்த மரியாஸ் எர்ஸ்மஸ் கள நடுவராகச் செயல்படத் தொடங்கினார். மூன்றாவது நடுவர் பணி வேறொரு நடுவருக்கு மாற்றப்பட்டது.

ஸ்கேன் பரிசோதனை முடிவில் ரீஃபெலுக்கு காயம் ஏதும் இல்லை எனத் தெரியவந்ததாக தெரிவித்த மருத்துவக் குழுவினர், சிறிது ஓய்வுக்குப் பிறகு அவர் பணியைத் தொடரலாம் என்று கூறினர்.

இந்நிலையில், தொடர்ந்து ஓய்வு பெறுவதற்காக பால் ரீஃபெல் மும்பை டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். மரியாஸ் எர்ஸ்மஸ் கள நடுவராக செயல்படுவார் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT