செய்திகள்

விசாகப்பட்டினம் டெஸ்ட்: இங்கிலாந்துக்கு 405 ரன்கள் வெற்றி இலக்கு!

இந்திய -இங்கிலாந்து அணிகளுக்கு இடையே விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து வெற்றி பெற இந்தியா 405 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. 

DIN

விசாகப்பட்டினம்: இந்திய -இங்கிலாந்து அணிகளுக்கு இடையே விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து வெற்றி பெற இந்தியா 405 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. 

ஆட்டத்தின் நான்காம் நாளான இன்று 3 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் என்ற நேற்றைய ஸ்கோருடன் இந்தியா தனது ஆட்டத்தை தொடர்ந்தது. ரஹானே 26, கோஹ்லி 81 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.    இருவரும் சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு 77 ரன்களை குவித்தனர். மற்றவர்கள் யாரும் பெரிதாக சோபிக்கவில்லை. ஆனால் இறுதி நேரத்தில் ஜெயந்த் யாதவ் 27 ரன்கள்  எடுத்தது இந்தியாவுக்கு பேருதவியாக இருந்தது.

இங்கிலாந்து சார்பில் ஸ்டூவர்ட் பிராட், அதில் ரஷீத் ஆகியோர் தலா 4 விக்கெட்களையும், ஜேம்ஸ் ஆண்டர்சன், மொயீன் அலி தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

எனவே முதல் இன்னிங்சில் இந்தியா கூடுதலாக பெற்ற ரன்களையும் சேர்த்து  இங்கிலாந்துக்கு 405 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்திய மண்ணில் இதுவரை எந்த அணியும் 405 ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக 387 ரன்கள்தான் சேஸ் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% உடனடி வரி: அதிபர் டிரம்ப் உத்தரவு!

காரைக்காலில் தொடர் மழை: பள்ளிகளுக்கு விடுமுறை!

அயலகத் தமிழா் மாநாட்டில் 4 ஒப்பந்தங்கள்

மணப்பாறையில் மயில்களை வேட்டையாடிய 5 போ் கைது

SCROLL FOR NEXT