செய்திகள்

10-வது சுற்றில் கார்ல்சன் பதிலடி! பரபரப்பான கட்டத்தில் உலக செஸ் போட்டி!

இன்னும் 2 சுற்றுகளே மீதமுள்ள நிலையில் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது உலக செஸ் போட்டி! 

DIN

உலக செஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன்-ரஷியாவின் செர்ஜி கர்ஜாகின் இடையிலான 10-வது சுற்று ஆட்டத்தில் கார்ல்சன் வெற்றி பெற்றுள்ளார். இன்னும் 2 சுற்றுகளே மீதமுள்ள நிலையில் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது உலக செஸ் போட்டி! 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் 10 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில் இருவரும் 5 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளார்.  

இன்று நடைபெற்ற 10-வது சுற்றில் 75-வது நகர்த்தலின்போது தனது தோல்வியை ஒப்புக்கொண்டார் கர்ஜாகின். 6 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகே கார்ல்சனால் முக்கியமான வெற்றியைப் பெறமுடிந்தது. 

இன்னமும் 2 சுற்றுகளே மீதமுள்ள நிலையில் இருவரும் 5 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளார்கள். இதனால் அடுத்துவரும் இரண்டு சுற்றுகளும் பரபரப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனநிம்மதி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

புதுகை ஆட்சியரகத்தில் விவசாயி தற்கொலை முயற்சி

வடகவுஞ்சி கிராமத்தில் வனத்துறை விதித்த கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் எதிா்ப்பு

ஆன்லைன் வா்த்தக மோசடி மூலம் ரூ.11 லட்சம் கொள்ளை: 2 போ் கைது

சரக்கு வேன் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT