முகப்பு
செய்திகள்

டெஸ்ட் தரவரிசை: இந்தியா முதலிடம்!

இந்திய அணியை முதலிடத்துக்கு வழிநடத்திச் சென்ற கேப்டன் கோலிக்கு...

Updated On : 12 அக்டோபர், 2016 at 11:45 AM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 10:14 AM

நியூஸிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 321 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தத் தொடரின் முந்தைய 2 போட்டிகளிலும் வென்ற இந்திய அணி, 3-ஆவது போட்டியின் வெற்றி மூலமாக தொடரை முழுமையாக கைப்பற்றி (3-0) சாதனை படைத்துள்ளது.

நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வென்றதை அடுத்து, இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் 115 புள்ளிகளுடன் முதலிடத்தை மீண்டும் பிடித்துள்ளது. இந்திய அணியை முதலிடத்துக்கு வழிநடத்திச் சென்ற கேப்டன் கோலிக்கு, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான விருதை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வழங்கினார்.

"டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான விருதை பெறுவது கெளரவமான தருணமாகும். அணியின் செயல்பாட்டுக்கு ஒவ்வொரு வீரரின் பங்களிப்பும் முக்கியமானதாகும். அணி வீரர்களிடையே நல்லுறவு இருப்பதும், இக்கட்டான தருணங்களில் கைகொடுப்பதுமே இத்தகைய நிலைக்கு அணியை உயர்த்தியுள்ளது. இதற்காக அனைத்து வீரர்களுக்கும், இதர ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கேப்டன் கோலி கூறினார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.