செய்திகள்

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் டிஆர்எஸ்: பிசிசிஐ சம்மதம்

DIN

இந்தியா-இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின்போது டிஆர்எஸ் (நடுவரின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் முறை) பயன்படுத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) சம்மதம் தெரிவித்துள்ளது.
டிஆர்எஸ்ஸை பயன்படுத்துவதற்கு நீண்ட காலமாக கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த பிசிசிஐ, இப்போது சோதனை அடிப்படையில் டிஆர்எஸ்ஸை பயன்படுத்துவதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், "வரும் நவம்பர் 9-ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தியா-இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின்போது டிஆர்எஸ் பயன்படுத்தப்படவுள்ளது.

டிஆர்எஸ் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அதை ஆய்வு செய்வதற்காக சோதனை அடிப்படையில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. டிஆர்எஸ் தொழில்நுட்பத்தில் சில

குறைபாடுகள் இருப்பதாக நாங்கள் தெரிவித்திருந்தோம். அதற்கு இப்போது தீர்வு காணப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனி டிஆர்எஸ்ஸுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தார். ஆனால் டெஸ்ட் கேப்டனான கோலி, பயிற்சியாளர் அனில் கும்ப்ளேஆகியோர் டிஆர்எஸ் முறைக்கு சமீபத்தில் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இதுதவிர டிஆர்எஸ்ஸில் பயன்படுத்தப்படும் பால் டிராக்கிங் தொழில்நுட்பம், ஹாட் ஸ்பாட் தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்யப்பட்டிருந்த மேம்பாடு குறித்து ஐசிசி கிரிக்கெட் கமிட்டி தலைவரானஅனில் கும்ப்ளே கடந்த ஆண்டு ஆய்வு செய்தார்.
சமீபத்தில் ஐசிசி நிர்வாகிகள் மற்றும் டிஆர்எஸ் தொழில்நுட்ப நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோர் பிசிசிஐ நிர்வாகிகளை சந்தித்துப் பேசினர். அதைத் தொடர்ந்து டிஆர்எஸ்ஸுக்கு பச்சைக் கொடிகாட்டியிருக்கிறது பிசிசிஐ. 2008-இல் இலங்கையில் இந்திய அணி சுற்றுப்பயணம் செய்தபோது டிஆர்எஸ் பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகு இந்தியா பங்கேற்ற இரு தரப்புத் தொடர் எதிலும் டிஆர்எஸ்பயன்படுத்தப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

SCROLL FOR NEXT