செய்திகள்

மொகாலி ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 286 ரன்கள் வெற்றி இலக்கு!

DIN

மொகாலி: இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள்போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி இலக்காக 286 ரன்களை  நியூசிலாந்து நிர்ணயித்துள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு ஒரு நாள்; போட்டித் தொடரின் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. நியூசிலாந்து அணியில் டேவிச்சுக்கு பதிலாக நீசம் சேர்க்கப்பட்டார்.

தொடக்க வீரர்களாக கப்தில், லாதம் ஆகியோர் களம் இறங்கினார்கள். கப்தில் அதிரடியாக விளையாடினார். ஆனால் 7-வது ஓவரில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் எல். பி.டபிள்யூ முறையில் அவுட்டாகி வெளியேற்றினார். இவர் 21 பந்தில் தலா இரண்டு பவுண்டரி, சிக்சருடன் 27 ரன்கள் எடுத்தார்.

அடுத்து லாதம் உடன் கேப்டன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி  34 ரன்கள் மட்டுமே சேர்த்தது. வில்லியம்சன் 27 பந்தில் 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். 3-வது விக்கெட்டுக்கு லாதம் உடன் ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். லாதம் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 59 பந்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் இந்த ரன்னைத் தொட்டார். .

28.2 ஓவரில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மிஸ்ரா பந்து வீச்சில் டெய்லர் ஸ்டம்பிங் முறையில் ஆட்டம் இழந்தார். அவர் 57 பந்தில் 44 ரன்கள் சேர்த்தார். அதன்பின் நியூசிலாந்தின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது.

30-வது ஓவரின் 4-வது பந்தில் ஆண்டர்சன் 6 ரன்னிலும், 31-வது ஓவரின் 2-வது பந்தில் ரோஞ்சி 1 ரன்னிலும், 32-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் லாதம் 61 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதனால் நியூசிலாந்து அணி 17 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது. அடுத்து வந்த சான்ட்னெர் 7 ரன்னிலும், சவுத்தி 23 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

9-வது விக்கெட்டுக்கு நீசம் உடன் ஹென்றி ஜோடி சேர்ந்தார். அப்போது நியூசிலாந்து அணி 37.5 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்து தத்தளித்து கொண்டிருந்தது. நீசம் - ஹென்றி ஜோடி இந்திய பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்தது. குறிப்பாக நீசம் 44 பந்தில் 6 பவுண்டரியுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார். இவர் 49-வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டம் இழந்தார். அவர் 47 பந்தில் 7 பவுண்டரியுடன் 57 ரன்கள் சேர்த்திருந்தார். இந்த ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 67 பந்தில் 84 ரன்கள் குவித்தது.

முடிவில் நியூசிலாந்து அணி 48.4 ஓவரில் 285 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. ஹென்றி 37 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 39 ரன்கள் விளாசி ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இந்திய அணி சார்பில் கேதர் ஜாதவ் 5 ஓவர்கள் வீசி 39 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 10 ஓவர்களில் 75 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பும்ப்ரா, மிஸ்ரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை  வீழ்த்தினர்.

286 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா தற்பொழுது விளையாடி வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

யார் இந்த நடன மங்கை?

SCROLL FOR NEXT