செய்திகள்

செரீனா வில்லியம்ஸ் தோல்வி: 23-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் கனவு தகர்ந்தது

அமெரிக்க ஓபன் மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் போட்டியில் 10-ம் தரநிலையில்

தினமணி

நியூயார்க்: அமெரிக்க ஓபன் மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் போட்டியில் 10-ம் தரநிலையில் உள்ள செக்.குடியரசு வீராங்கனை பிளிஸ்கோவாவிடம் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்து வெளியேறினார். இதையடுத்து செரீனாவின் 23-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் கனவு தகர்ந்தது.
 
பெண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் நம்பர் ஒன் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், 10-ம் நிலை வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) சந்தித்தார். போட்டியில் செரீனாவின் வழக்கமான அதிரடி காணப்படாத நிலையில் 6-2, 7-6 என்ற நேர் செட்களில் செரீனாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார் பிளிஸ்கோவா.

நம்பர்-ஒன் வீராங்கனை, தொடர் வெற்றியாளர் என பல்வேறு புகழுக்கு சொந்தமான செரீனா வில்லியம்ஸின் 2-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் கனவு தகர்ந்தது. வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் வீழ்ந்தது, அவருடைய ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் வியூகம் வெற்றி பெறுமா..? - சவுக்கு சங்கர்

ஒற்றைப்புள்ளி மக்களாட்சி

பலத்த பாதுகாப்புடன் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்!

மதுரை மாநாடு ஒத்திவைப்பு: ஓ. பன்னீர்செல்வம்

சென்னையில் 27 விமான சேவைகள் பாதிப்பு!

SCROLL FOR NEXT