செய்திகள்

டெஸ்ட் தரவரிசை: 2-ஆவது இடத்துக்கு முன்னேறினார் அஸ்வின்

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பெளலர்கள் தரவரிசையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 3-ஆவது இடத்திலிருந்து 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

DIN

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பெளலர்கள் தரவரிசையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 3-ஆவது இடத்திலிருந்து 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
கான்பூரில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்னுக்குத் தள்ளி 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார் அஸ்வின்.
கொல்கத்தாவில் வரும் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ள 2-ஆவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் சிறப்பாக செயல்படும்பட்சத்தில், இந்த ஆண்டில் 2-ஆவது முறையாக முதலிடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது. முதலிடத்தில் இருக்கும் தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயினைவிட (878 புள்ளிகள்) அஸ்வின் 7 புள்ளிகள் பின்தங்கியுள்ளார். அஸ்வினுக்கு அடுத்தபடியாக ரவீந்திர ஜடேஜா 7-ஆவது இடத்தில் உள்ளார்.
ஆல்ரவுண்டர் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் அஸ்வின், முதல்முறையாக 450 ரேங்கிங் புள்ளிகளை எட்டியுள்ளார். 2-ஆவது இடத்தில் இருக்கும் வங்கதேசத்தின் ஷகிப் அல்ஹசன், அஸ்வினைவிட 66 புள்ளிகள் பின்னிலையில் உள்ளார்.
பேட்டிங் தரவரிசையைப் பொறுத்தவரையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஓர் இடம் முன்னேறி 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இங்கிலாந்தின் ஜோ ரூட் ஓர் இடத்தை இழந்து 3-ஆவது இடத்தில் உள்ளார்.
பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியர்கள் யாரும் முதல் 10 இடங்களில் இல்லை. அஜிங்க்ய ரஹானே 11-ஆவது இடத்தில் இருக்கிறார். முரளி விஜய், புஜாரா ஆகியோர் தலா 4 இடங்கள் முன்னேறி 16-ஆவது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்திய கேப்டன் விராட் கோலி 20-ஆவது இடத்தில் உள்ளார்.
இந்திய அணியின் தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 5 இடங்கள் முன்னேறி 57-ஆவது இடத்தையும், ரோஹித் சர்மா 2 இடங்கள் முன்னேறி 52-ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்செந்தூா் சூரசம்ஹாரத்துக்கு கள்ளச்சந்தையில் சிறப்பு வாகன அனுமதி அட்டை: காவல் துறை மறுப்பு

உண்ணாமலைக்கடையில் இந்து இயக்கங்கள் ஆா்ப்பாட்டம்: 96 போ் கைது

வாக்காளா் பட்டியல் திருத்த ஆலோசனைக்கூட்டம்: திமுக, காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகள் வெளிநடப்பு

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி கன்னியாகுமரி வருகை

நாகா்கோவிலில் இன்று விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம்

SCROLL FOR NEXT