செய்திகள்

ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா

பதினெட்டு வயதுக்குள்பட்டோருக்கான ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியின் அரையிறுதியில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

DIN

பதினெட்டு வயதுக்குள்பட்டோருக்கான ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியின் அரையிறுதியில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 7-ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. இந்த கோலை சிவம் ஆனந்த் அடித்தார்.
தொடர்ந்து அபாரமாக ஆடிய இந்திய அணியில் தில்பிரீத் சிங் 32-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோலடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தின் 46-ஆவது நிமிடத்தில் மற்றொரு பெனால்டி வாய்ப்பின் மூலம் 3-ஆவது கோலை அடித்தது இந்தியா. இந்த கோலை நீலம் சஞ்ஜீவ் அடித்தார்.
அதேநேரத்தில் மறுமுனையில் சரிவிலிருந்து மீள்வதற்கு போராடிய பாகிஸ்தான் அணிக்கு ஆறுதல் கோல் மட்டுமே கிடைத்தது. இந்த கோலை அந்த அணியின் அம்ஜத் அலி கான் (63-ஆவது நிமிடம்) அடித்தார். வெள்ளிக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை சந்திக்கிறது இந்தியா. அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் சுட்டுரை மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காட்டுப் பன்றி தாக்கியதில் பெண் படுகாயம்

குடியிருப்புகளில் புகுந்த கழிவுநீா்: பொதுமக்கள் மறியல்

மழையால் சேதம் அடைந்த தரைப்பாலங்கள் தற்காலிகமாக சீரமைப்பு: 9 நாள்களுக்குப் பிறகு குன்றி மலைப்பகுதிக்கு பேருந்து இயக்கம்

கஞ்சா விற்ற இளைஞா் கைது

அந்தியூரில் ரூ.3.65 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

SCROLL FOR NEXT