செய்திகள்

ஊக்கமருந்து பயன்பாட்டை கிரிமினல் குற்றமாக்க வேண்டும்

DIN

விளையாட்டுத் துறையில் ஊக்கமருந்து பயன்பாட்டை கிரிமினல் குற்றமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல், தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பை (நாடா) கேட்டுக் கொண்டுள்ளார்.
தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கருத்தரங்கு தில்லியில் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. விளையாட்டில் ஊக்கமருந்து பயன்பாடு குறித்து அந்தக் கருத்தரங்கு நடைபெற இருக்கும் நிலையில் விஜய் கோயல் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், இந்திய கால்பந்து வீரரான சுப்ரதா பால் ஊக்கமருந்து குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள நிலையில் விஜய் கோயலின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
இதுகுறித்து விஜய் கோயல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
விளையாட்டுத் துறையில் ஊக்கமருந்து பயன்பாட்டை தடுக்கும் வகையில், அதை கிரிமினல் குற்றமாக அறிவிக்க வேண்டும்.
ஊக்கமருந்து பயன்பாட்டின் பாதிப்புகள் குறித்து அடிப்படையில் இருந்தே விளையாட்டு வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும். இதற்காக, பள்ளி மற்றும் கல்லூரிகளில் கருத்தரங்கு மற்றும் பிரசாரங்கள் நடத்தப்படலாம்.
ஊக்கமருந்து பயன்பாடு பிரச்னைகளை கையாள ஏதுவாக, விளையாட்டு வீரர்களுக்கான உணவுப் பொருள்களை பரிசோதிக்கும் திட்டம் ஒன்றை ஏற்படுத்த அரசு சிந்தித்து வருகிறது. இதன்மூலம், தாங்கள் உட்கொள்ளும் உணவுகள் தடைசெய்யப்பட்ட பொருள்கள் இல்லாதவை என்பதை விளையாட்டு வீரர்கள் உறுதி செய்ய இயலும்.
அத்துடன், அறிவியல்பூர்வமான உணவுக் கட்டுப்பாடுகள் மற்றும் ஊட்டச்சத்துகளை வீரர்களுக்கு வழங்க வேண்டும் என்று அதில் விஜய் கோயல் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT