செய்திகள்

டெஸ்ட் தொடரிலிருந்து இலங்கை வீரர் நுவான் பிரதீப் விலகல்!

எழில்

இலங்கை தலைநகர் கொழும்பில் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே 2-வது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் தசைப்பிடிப்பு காரணமாக இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் பாதியிலேயே விலகினார். அவர் 2-ஆவது நாளில் பந்துவீசவில்லை.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து பிரதீப் அதிகாரபூர்வமாக விலகியுள்ளார்.  முன்னதாக முதல் டெஸ்டில் அவர் 6 விக்கெட் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.  இதனால் இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 பேட்ஸ்மேன்களுடன் மட்டுமே விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில் 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்ட கோலி தலைமையிலான இந்திய அணி, இந்தப் போட்டியிலும் வென்று தொடரைக் கைப்பற்றுவதில் தீவிரமாக உள்ளது. அதேநேரத்தில் தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க இந்தப் போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியுள்ளது இலங்கை அணி. இந்நிலையில் பிரதீப்பின் விலகல் இலங்கை அணிக்குப் பலத்த பின்னடைவை ஏற்படுத்தும்.

இலங்கை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் குணரத்னே காயம் காரணமாக முதல் டெஸ்டிலிருந்து விலகினார். இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவன் 31 ரன்களில் இருந்தபோது கொடுத்த கேட்ச்சை இரண்டாவது ஸ்லிப் திசையில் நின்ற குணரத்னே பிடிக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக பந்து தாக்கியதில் குணரத்னேவின் பெருவிரலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அறுவை சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதைத்தொடர்ந்து அவர் முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. பிறகு அவர் இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து விலகினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT