செய்திகள்

உலகின் மிகச்சிறந்த ஃபீல்டிங் அணி: ரவி சாஸ்திரியின் உலகக் கோப்பை திட்டம்!

2019 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி மிகச்சிறந்த ஃபீல்டிங் அணியாக இருக்கும் என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்...

எழில்

2019 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி மிகச்சிறந்த ஃபீல்டிங் அணியாக இருக்கும் என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். 

இலங்கைக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. இதன்மூலம் 3-0 என்ற கணக்கில் இந்தத் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, இலங்கையை 'ஒயிட் வாஷ்' ஆக்கியது. முதல் டெஸ்டில் 304 ரன்கள் வித்தியாசத்திலும், 2-ஆவது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 54 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி, 3-ஆவது டெஸ்டிலும் இன்னிங்ஸ் வெற்றியை ருசித்தது. வெளிநாட்டு மண்ணில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா ஓர் அணியை 'ஒயிட் வாஷ்' ஆக்குவது இதுவே முதல்முறையாகும். அணிகளின் தரவரிசையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்திலேயே உள்ளது. இலங்கைக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம் இந்திய அணிக்கு இரு ரேங்கிங் புள்ளிகள் கிடைத்துள்ளது. தற்போது இந்திய அணி 125 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

இத்தகைய சாதனைகளைச் செய்த இந்திய அணி குறித்து அதன் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பெருமையுடன் பேட்டியளித்ததாவது: 

உலகின் மிகச்சிறந்த ஃபீல்டிங் அணியாக 2019 உலகக்கோப்பை சமயத்தில் இந்திய அணி இருக்கவேண்டும். வீரர்களுக்கான முக்கியத் தகுதியில் ஃபீல்டிங்கும் உடற்தகுதியும் முக்கிய இடம் வகிக்கின்றன. ஒருநாள் உலகக்கோப்பை எந்தளவுக்கு முக்கியமோ அதேபோல டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிப்பதும் முக்கியம். 

ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் கிரிக்கெட்டில் அபாரமான முடிவுகளைப் பெறுகிறார்கள். உலகக்கோப்பைப் போட்டியில் சாதிப்பது முக்கியம்தான். அதேபோல டெஸ்ட் கிரிக்கெட்டில் வலிமையான அணியாகவும் இருக்கவேண்டும். 

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடிய விதம் திருப்தியளிக்கிறது. பாண்டியாவின் 2 நோ பால், சமி வீசிய ஒரு நோ பால் தவிர பந்துவீச்சில் சிறப்பாகத் திறமையை வெளிப்படுத்தினோம். டெஸ்ட் தொடரில் எத்தனை கேட்சுகளைத் தவறவிட்டோம்? இரண்டு! இதுபோன்ற தவறுகள் இல்லாத கிரிக்கெட்டையே விளையாட விரும்புகிறோம். அதற்கான முயற்சிதான் முக்கியம் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT