செய்திகள்

ஆசியா கோப்பை ஹாக்கி: அக்டோபர் 15 அன்று இந்தியா - பாகிஸ்தான் மோதல்!

எழில்

வங்கதேசம் டாக்காவில் அக்டோபர் 11 முதல் 22 வரை ஆசியா கோப்பை ஹாக்கி போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியை வெல்லும் அணி அடுத்த வருடம் இந்தியாவின் ஒடிஷாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறும். 

குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், வங்கதேசம் ஆகிய அணிகள் உள்ளன. இப்போட்டியில் 8 நாடுகள் பங்கேற்கின்றன. 

2013-ல் நடைபெற்ற ஆசியா கோப்பைப் போட்டியை தென் கொரியா வென்றது. இந்தப் போட்டித் தரவரிசையில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது. உலகளவிலான தரவரிசையில் 6-ம் இடம் உள்ள இந்திய அணி இந்தப் போட்டியை 2003, 2007 ஆகிய ஆண்டுகளில் வெற்றி பெற்றது. 

அக்டோபர் 11 அன்று நடைபெறுகிற போட்டியில் ஜப்பானை எதிர்கொள்கிறது இந்திய அணி. அக்டோபர் 15 அன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

இந்த மாதம் இப்படித்தான்!

”டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும்? விமர்சித்த காங்கிரஸின் நிலை..” பிரதமர் மோடி பிரசாரம்

ஜுபிடரின் நிலவோ.. ஸ்ரீமுகி!

ரிஷபத்துக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான்

SCROLL FOR NEXT