செய்திகள்

விராட் கோலி தொடர்ந்து 2-ஆவது இரட்டைச் சதம்

Raghavendran

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தில்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கி நடக்கிறது.

இதன் 2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இரட்டைச் சதம் விளாசினார்.

முன்னதாக, டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு முரளி விஜய், விராட் கோலி ஜோடி சிறப்பாக ஆடியது. இந்த ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 283 ரன்கள் குவித்தது.

முரளி விஜய், முதல்நாள் ஆட்டநேர இறுதியில் 155 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அப்போது கோலி  156 ரன்களுடன் களத்தில் நின்றார்.

இதையடுத்து 2-ஆம் நாளில் தொடர்ந்து பேட் செய்த விராட் கோலி, இரட்டைச் சதத்தை எட்டினார். மேலும், நடப்புத் தொடரிலேயே அடுத்தடுத்து 2 இரட்டைச் சதங்களை விளாசி புது சாதனையும் படைத்தார்.

238 பந்துகளில் 20 பவுண்டரிகளின் உதவியுடன் 201 ரன்கள் குவித்தது தொடர்ந்து விளையாடி வருகிறார். இதனால் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 456 ரன்கள் குவித்துள்ளது. அவருடன் ரோஹித் ஷர்மாவும் 40 ரன்களுடன் விளையாடி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT