செய்திகள்

ரஞ்சி கிரிக்கெட்: மும்பை 173

DIN

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்நாடகத்துக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் மும்பை தனது முதல் இன்னிங்ஸில் 56 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது.
மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் வியாழக்கிழமை தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற கர்நாடகம் பந்துவீச தீர்மானித்தது. பேட் செய்த மும்பை அணியில் தவல் குல்கர்னி அதிகபட்சமாக 75 ரன்கள் எடுத்தார். கர்நாடக தரப்பில் வினய் குமார் 6 விக்கெட் எடுத்தார்.
பின்னர் தனது முதல் இன்னிங்ûஸ தொடங்கிய கர்நாடகம், முதல் நாள் முடிவில் 29 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்துள்ளது. மயங்க் அகர்வால் 62, கெüனைன் அப்பாஸ் 12 ரன்களுடன் ஆடி வருகின்றன.
மேற்கு வங்கம்-261/6: இதனிடையே, குஜராத்துக்கு எதிரான மற்றொரு காலிறுதியில் மேற்கு வங்கம் முதல் இன்னிங்ஸில் 86 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 261 ரன்களுடன் ஆடி வருகிறது. அமித் 8, ஆமிர் கானி 6 ரன்களுடன் ஆடி வருகின்றனர். குஜராத் தரப்பில் செüதரி 3 விக்கெட் வீழ்த்தினார்.
மத்திய பிரதேசம்-223/6: மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் தில்லியை எதிர்கொண்டுள்ள மத்திய பிரதேசம், முதல்நாள் முடிவில் 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்துள்ளது. ஹர்பிரீத் சிங் 47, புனீத் 8 ரன்களுடன் ஆடி வருகின்றனர். தில்லி தரப்பில் விகாஸ் மிஸ்ரா 3 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
விதர்பா-45/3: மேலும் ஒரு காலிறுதியில் கேரளத்துடன் விளையாடி வரும் விதர்பா, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 24 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்துள்ளது. கணேஷ் சதீஷ் 7, கரன் சர்மா 7 ரன்களுடன் ஆடி வருகின்றனர். கேரள தரப்பில் அக்ஷய் 2 விக்கெட் எடுத்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூத்துக்குடி பொறியியல் கல்லூரியில் 250 மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள்

கோவில்பட்டியில் யுகாதி திருவிழா

வதேரா, டேவிட் பங்களிப்பில் மும்பை - 144/7

குமரி மாவட்டத்தில் பரவலாக கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

தோ்தல் நடத்தை விதி: இதுவரை ரூ.179 கோடி ரொக்கம் பறிமுதல்

SCROLL FOR NEXT