செய்திகள்

மும்பை ஐபிஎல் அணியை விட்டு விலகினார் ஜான்டி ரோட்ஸ்! புதிய பயிற்சியாளர் நியமனம்!

மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக இருந்த 48 வயது ஜான்டி ரோட்ஸ்...

எழில்

கடந்த 9 வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக இருந்த 48 வயது ஜான்டி ரோட்ஸ், சொந்தக் காரணங்களுக்காக அப்பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து நியூஸிலாந்தின் ஜேம்ஸ் பம்மெண்ட் ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் ஈடுபட்டு வரும் வியாபாரம் தொடர்பான பணிகளுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக ரோட்ஸ் கூறியுள்ளார். 2009 முதல் மும்பை ஐபிஎல் அணிக்காகப் பணியாற்றியுள்ள ரோட்ஸ் குறித்து அந்த அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி கூறியதாவது: மும்பை அணியின் மிகப்பெரிய பலமாக ரோட்ஸ் விளங்கியுள்ளார். அவருடைய பங்களிப்புகளை வார்த்தைகளால் மதிப்பிடமுடியாது. அவர் முடிவை மதிக்கிறோம். அவருடைய எதிர்காலத்துக்கு எங்கள் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். 

ஜேம்ஸ் பம்மெண்ட், ஃபீல்டிங் பயிற்சி தொடர்பான பணிகளை நியூஸிலாந்து அணிக்காகச் செய்துள்ளார். நார்தர்ன் டிஸ்டிரிக்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் இன்று பிரசாரத்தைத் தொடங்குகிறார் ராகுல்!

350 மீட்டர் உயரத்தில் கால்பந்து திடல்: செளதியின் கனவுத் திட்டம்!

லாபம் கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

‘தோ்தல் நேர வாக்குறுதிகளை தொடா்ந்து நிறைவேற்றி வருகிறது தமிழக அரசு’

ராஜராஜ சோழனின் சதயவிழா! தஞ்சை மாவட்டத்தில் நவ.1 உள்ளூா் விடுமுறை!

SCROLL FOR NEXT