செய்திகள்

ராஸ் டெய்லர் சதம்! மே.இ. அணி மீண்டும் தடுமாற்றம்!

எழில்

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நியூஸிலாந்தின் ராஸ் டெய்லர் சதமெடுத்து அசத்தியுள்ளார்.

இரு அணிகளுக்கு இடையே சனிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி, 373 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியால் 221 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது. இதனால் முதல் இன்னிங்ஸில் 152 ரன்கள் முன்னிலை பெற்ற நியூஸிலாந்து அணி, தனது 2-வது இன்னிங்ஸில் 77.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. 

நியூஸிலாந்து அணியின் ராய் டெய்லர் சதமெடுத்து அசத்தினார். இது அவருடைய 17-வது சதமாகும். டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி சார்பாக அதிக சதமெடுத்த வீரர்களான குரோவ், கேன் வில்லியம்சன் ஆகியோருடன் டெய்லர் இணைந்துள்ளார். அவர், 107 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

444 ரன்கள் என்கிற இலக்குடன் தனது 2-வது இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய மே. அணி, 3-வது நாளின் முடிவில் 8 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. 8 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் மே.இ. அணி வெற்றிபெற இன்னும் 414 ரன்கள் எடுக்கவேண்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏதென்ஸ் நகரில் சமந்தா!

சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும்: வானிலை மையம்

'ரசிகனிலிருந்து இயக்குநர் வரை..’: ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி

ஜி.எஸ்.டி. வசூல் புதிய உச்சம்!

குஷி ஜோ!

SCROLL FOR NEXT