செய்திகள்

4,0,2,1,1: முதல் ஐந்து பேட்ஸ்மேன்களின் ஸ்கோர்! மே.இ. அணி மீண்டும் தோல்வி!

9 ரன்களுக்குள் முதல் 5 விக்கெட்டுகளை இழந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும்...

எழில்

9 ரன்களுக்குள் முதல் 5 விக்கெட்டுகளை இழந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் தோல்வியடைந்துள்ளது.

23 ஓவர்களில் 166 ரன்கள் என்கிற கடினமான இலக்கை எதிர்கொண்ட மேற்கிந்தியத் தீவுகள், கடைசியில் 99 ரன்கள் எடுத்து 66 ரன்கள் வித்தியாசத்தில் மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் தோல்வியடைந்து ஒருநாள் தொடரை இழந்துள்ளது.

கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. மழையால் ஆட்டம் பெருமளவு பாதிக்கப்பட்டதால் நியூஸிலாந்து அணியால் 23 ஓவர்கள் மட்டுமே விளையாடமுடிந்தது. அந்த அணி சிறப்பாக விளையாடி 4 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. டெய்லர் 47 ரன்களும் லதம் 37 ரன்களும் எடுத்தார்கள். 

இதன்பிறகு மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு 23 ஓவர்களில் 166 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் முதல் ஐந்து வீரர்களின் விக்கெட்டுகளை 9 ரன்களுக்குள் இழந்து தடுமாறி மே.இ. அணி கடைசியில் 23 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் மட்டுமே எடுத்தது. போல்ட், சான்ட்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 3-வது ஒருநாள் போட்டியை டிஎல் முறையில் 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி ஒருநாள் தொடரை 3-0 என்கிற கணக்கில் வென்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT