செய்திகள்

வாழ்நாள் தடையை மீறி தேர்தலில் போட்டியிடமுடியுமா?: அசாருதீன் பதில்!

சூதாட்ட விவகாரம் ஒன்றில் அசாருதீனுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டிய பிசிசிஐ, அவருக்கு வாழ்நாள் தடை விதித்தது.

எழில்

இந்திய அணி முன்னாள் கேப்டனான அசாருதீன், 1992, 1996, 1999 என தொடர்ந்து 3 உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்திச் சென்றார். கடந்த 2000-ஆம் ஆண்டில் சூதாட்ட விவகாரம் ஒன்றில் அசாருதீனுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டிய பிசிசிஐ, அவருக்கு வாழ்நாள் தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தை நாடிய அசாருதீனுக்கு, சாதகமாக தீர்ப்பளித்தது ஆந்திர உயர் நீதிமன்றம். எனினும், அவர் மீதான தடையை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக நீக்கவில்லை.

இந்நிலையில், ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவிக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கலுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை அவர் கூறியதாவது:

ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தைப் பொருத்த வரையில், கிரிக்கெட்டில் உரிய கவனம் செலுத்தாததே அதன் பிரச்னை. ரஞ்சி கிரிக்கெட்டில் பின்தங்கிய நிலையில் உள்ளோம். ஹைதராபாதில் கிரிக்கெட் விளையாட்டை நன்றாக மேம்படுத்துவதே எனது நோக்கமாகும். தனிநபர்களின் விருப்பத்திற்கேற்ப ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தை நிர்வகிக்க முடியாது. மாவட்ட அளவில் இருந்தே கிரிக்கெட்டை மேம்படுத்த வேண்டும். கடினமாக உழைக்கும் வீரர்கள் மாவட்ட அளவில் இருந்தே உருவாகிறார்கள் என்று அசாருதீன் கூறினார்.

வாழ்நாள் தடை குறித்து அசாருதீனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மேல்முறையீடு செய்ய பிசிசிஐ-க்கு இரு வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டன. ஆனால் அவர்கள் அதுபோல செய்யவில்லை. எனக்குச் சாதகமாக தீர்ப்பு வந்தது. நான் இந்தத் தேர்தலில் போட்டியிடலாம் என்றும் எனக்குச் சொல்லப்படுகிறது. மற்றபடி என்னால் போட்டியிடமுடியாது என்பதெல்லாம் மற்றவர்கள் பரப்பும் வதந்திகள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசி மக்கள் குறைதீா் முகாமில் 692 போ் மனுக்கள் அளிப்பு

ஆலங்குளத்தில் நள்ளிரவில் பலத்த மழை

கீழப்பாவூா் தெற்கு ஒன்றியத்தில் திமுக பரப்புரை

பிகாரில் போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிப்பு: தில்லி போலீஸ் நடவடிக்கை

‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

SCROLL FOR NEXT