செய்திகள்

ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டி: செரீனா வில்லியம்ஸ் சாம்பியன்!

ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டித் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தனது சகோதரி  வீனஸ் வில்லியம்சை வீழ்த்தி செரீனா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

DIN

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டித் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தனது சகோதரி  வீனஸ் வில்லியம்சை வீழ்த்தி செரீனா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டித் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டம் இன்று மெல்போர்னில் நடைபெற்றது. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த சகோதரிகளான வீனஸ் வில்லியம்ஸ் மற்றும் செரீனா வில்லியம்ஸ் ஆகிய இருவரும் மோதினர்.

பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் செரீனா வில்லியம்ஸ் தனது சகோதரி வீனசை வென்றார்.

செரினா வெல்லும் 23-ஆவது க்ராண்ட் ஸ்லாம் பட்டம் இதுவாகும். இன்னும் ஒரு பட்டம் வென்றால் உலக சாதனையை அவர் சமன் செய்வார். ஆஸ்திரேலிய ஓப்பனில் அவர் வெல்லும் 7-வது பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வியப்பில் ஆழ்த்திய கிறிஸ்டோஃபர் நோலனின் ஒடிசி முன்னோட்டம்!

மோசமான ஃபார்மிலிருந்து கண்டிப்பாக மீண்டு வருவேன்: சூர்யகுமார் யாதவ்

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

SCROLL FOR NEXT