செய்திகள்

முஷ்டாக் அலி டி20 தமிழகம் வெற்றி

DIN

சையது முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் கர்நாடக அணியைத் தோற்கடித்தது.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கர்நாடக அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சமார்த் 40 ரன்கள் எடுத்தார். தமிழகம் தரப்பில் விக்னேஷ், நடராஜன், ஆர்.எஸ்.ஷா, முருகன் அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
பின்னர் ஆடிய தமிழக அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. முருகன் அஸ்வின் 20 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 34 ரன்கள் எடுத்தார். முன்னதாக தினேஷ் கார்த்திக் 33 பந்துகளில் 45 ரன்களும், சங்கர் 26 பந்துகளில் 30 ரன்களும் எடுத்தனர். கர்நாடகம் தரப்பில் கெளதம் 2 விக்கெட் எடுத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

SCROLL FOR NEXT