செய்திகள்

இந்திய கிரிக்கெட் வீரர்கள் கையில் கருப்புப்பட்டை அணிந்து விளையாடியது ஏன்?

பத்தொன்பது வயதுக்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்றுநர்... 

எழில்

இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி கண்டது இந்தியா. இங்கிலாந்து அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 8 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் அந்த ஓவரை வீசிய ஜஸ்பிரித் பூம்ரா, ஜோ ரூட், ஜோஸ் பட்லரை ஆகியோரை வீழ்த்தியதோடு, 2 ரன்களை மட்டுமே கொடுத்து இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்தார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும் தலா 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. 3-ஆவது ஆட்டம் வரும் 1-ஆம் தேதி பெங்களூரில் நடைபெறுகிறது.

இந்நிலையில், பத்தொன்பது வயதுக்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்றுநர் (உடற்பயிற்சி) ராஜேஷ் சாவந்த் (45) மரணமடைந்தார். இதுதவிர இந்திய கிரிக்கெட் வீரர் சமியின் தந்தை தெளசிஃப் அலி சமீபத்தில் காலமானார். இதையடுத்து இவ்விருவருக்கும் அஞ்சலி செலுத்தும்விதத்தில் நேற்றைய போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் கையில் கருப்புப்பட்டை அணிந்து விளையாடினார்கள். 

மும்பையில் நடைபெற்று வரும் பயிற்சி முகாமுக்கு பயிற்றுநர் சாவந்த் ஞாயிற்றுக்கிழமை வரவில்லை. இதையடுத்து ஹோட்டலில் அவர் தங்கியிருந்த அறைக்கு சென்ற அணியின் மற்ற அலுவலர்கள் கதவை தட்டிப் பார்த்தனர். ஆனால் அதற்கு எந்த பலனும் இல்லை. இதையடுத்து ஹோட்டல் ஊழியர்கள் மூலம் அந்த அறையை திறந்து பார்த்தபோது சாவந்த் சுயநினைவை இழந்த நிலையில் இருந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சாவந்த், மாரடைப்பால் இறந்திருக்கலாம் என தெரிகிறது. சாவந்தின் மறைவுக்கு பிசிசிஐ இரங்கல் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசி மக்கள் குறைதீா் முகாமில் 692 போ் மனுக்கள் அளிப்பு

ஆலங்குளத்தில் நள்ளிரவில் பலத்த மழை

கீழப்பாவூா் தெற்கு ஒன்றியத்தில் திமுக பரப்புரை

பிகாரில் போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிப்பு: தில்லி போலீஸ் நடவடிக்கை

‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

SCROLL FOR NEXT