செய்திகள்

ஜிம்பாப்வேவுடனான தோல்வியால் உருண்ட தலை: இலங்கை அணிக்குப் புதிய கேப்டன்கள்!

இலங்கை அணியின் டெஸ்ட் கேப்டனாக தினேஷ் சண்டிமலும் ஒருநாள், டி20 போட்டிகளுக்கான கேப்டனாக..

எழில்

இலங்கைக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது ஜிம்பாப்வே. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது ஜிம்பாப்வே. இலங்கை மண்ணில் முதல்முறையாக தொடரை வென்று வரலாறு படைத்திருக்கிறது ஜிம்பாப்வே. கடந்த 8 ஆண்டுகளில் வெளிநாட்டு மண்ணில் ஜிம்பாப்வே அணி வென்ற முதல் தொடர் இதுதான்.

இதையடுத்து இலங்கை கிரிக்கெட்டில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றிலும் கேப்டனாக இருந்த ஏஞ்சலோ மேத்யூஸ், தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். ஜிம்பாப்வேயுடனான தோல்வியை அடுத்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். 

இலங்கை அணிக்கு 38 டெஸ்ட்டுகளிலும், 98 ஒருநாள் போட்டிகளிலும் 12 டி20 போட்டிகளிலும் மேத்யூஸ் கேப்டனாகச் செயல்பட்டுள்ளார்.

இதையடுத்து இலங்கை அணியின் டெஸ்ட் கேப்டனாக தினேஷ் சண்டிமலும் ஒருநாள், டி20 போட்டிகளுக்கான கேப்டனாக உபுல் தரங்காவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் என்ன வித்தியாசம்? ரசிகை ஆவேசம்

Untitled Nov 03, 2025 10:37 pm

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

SCROLL FOR NEXT