செய்திகள்

ஹிந்திக்கு அடுத்ததாக தமிழிலும் பிரத்யேக விளையாட்டு சேனல் தொடங்கியுள்ள ஸ்டார் நிறுவனம்!

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுமம் சமீபத்தில் தமிழிலும் ஒளிபரப்பைத் தொடங்கியுள்ளது. அதிலும் சாம்பியன்ஸ் டிராபி நேரடி ஒளிபரப்பு...

எழில்

தமிழ்நாட்டு விளையாட்டு ரசிகர்களுக்கு இது உற்சாகம் அளிக்கக்கூடிய செய்தி.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இந்திய மொழிகளில் ஹிந்திக்கு அடுத்ததாக தமிழிலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் என்கிற பிரத்யேக விளையாட்டு சேனல் ஒன்றைத் தொடங்கியுள்ளது. இது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுமத்தின் பத்தாவது சேனலாகும். இதற்கு முன்பு Star Sports 1, Star Sports 2, Star Sports Hindi 1, Star Sports Select 1 மற்றும் அவற்றின் ஹெச்.டி. சேனல்கள். இந்த எட்டு சேனல்களுடன் சேர்த்து கூடுதலாக Star Sports Select HD 2 என்றொரு சேனலும் இருந்தது. தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் 10-வது சேனலாகத் தொடங்கப்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுமம் சமீபத்தில் தமிழிலும் ஒளிபரப்பைத் தொடங்கியுள்ளது. அதிலும் சாம்பியன்ஸ் டிராபி நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், ஹேமங் பதானி, பத்ரிநாத் போன்றோர் தமிழில் வர்ணனை அளிக்கவுள்ளார்கள். 

இதற்கு முன்பு ஐபிஎல் போட்டி மட்டுமே தமிழ் வர்ணையுடன் ஒளிபரப்பப்பட்டு வந்தது. இனி ஸ்டார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எல்லா முக்கிய விளையாட்டுப் போட்டிகளையும் ஸ்டார் தமிழ் சேனலில் காணமுடியும். 

சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்குப் பிறகு தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி, ப்ரோ கபடி லீக், இந்திய சூப்பர் லீக் கால்பந்து போட்டி போன்ற முக்கியமான போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT