சாம்பியன்ஸ் டிராபி என்றால் ரோஹித் சர்மா - தவன் கூட்டணிக்குப் புது உற்சாகம் பிறந்துவிடும் போல.
கடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் கூட்டணி அமைத்த இருவரும் இறுதிப் போட்டியைத் தவிர மற்ற எல்லா ஆட்டங்களிலும் 50 ரன்களுக்கு மேல் எடுத்தார்கள். அதேபோல இந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியிலும் ஆடிய இரு ஆட்டங்களிலும் 100 ரன்களுக்கு மேல் எடுத்து சாதனை செய்துள்ளார்கள். இலங்கைக்கு எதிரான இன்றைய ஆட்டத்திலும் இருவரும் 138 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார்கள்.
கடந்தமுறை போல இந்தமுறையும் இந்திய அணி கோப்பையை வெல்ல இருவரும் முக்கியக் காரணமாக இருப்பார்களா? பார்க்கலாம்.
ரோஹித் - தவன் கூட்டணி
2013 சாம்பியன்ஸ் டிராபி
127, 101, 58, 77, 19
2017 சாம்பியன்ஸ் டிராபி
136, 138
6 50+ ரன்கள் 7 ஆட்டங்களில்
4 100+ ரன்கள் 7 ஆட்டங்களில்
இதுதவிர, தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் 100 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் இந்திய ஜோடி என்கிற சாதனையையும் இருவரும் நிகழ்த்தியுள்ளார்கள்.
123 vs ஆஸ்திரேலியா, சிட்னி
136 vs பாகிஸ்தான், எட்பாஸ்டன்
138 vs இலங்கை, லண்டன்
100 ரன்களுக்கு அதிகமாக எடுத்த இந்திய கூட்டணி
26 சச்சின் - கங்குலி
13 சச்சின் - சேவாக்
11 டிராவிட் - கங்குலி
11 சச்சின் - டிராவிட்
10 தோனி, யுவ்ராஜ், ரோஹித் - தவன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.