செய்திகள்

இந்தியா - வங்கதேசம் அரையிறுதிப் போட்டி: டக்வொர்த் லீவிஸுக்கு வேலை இருக்குமா?

இந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் அதிக மழையைச் சந்தித்த மைதானங்களில் முதன்மையானது...

எழில்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா. இதன்மூலம் 2-ஆவது வெற்றியைப் பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. அதேநேரத்தில் இந்த ஆட்டத்தில் தோற்ற தென் ஆப்பிரிக்க அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வெளியேறியது.

இதையடுத்து வரும் 15-ஆம் தேதி நடைபெறவுள்ள 2-ஆவது அரையிறுதியில் வங்கதேசத்தை இந்திய அணி சந்திக்கவுள்ளது.

பாகிஸ்தானுடன் ஜெயித்த அதே எக்பாஸ்டன் மைதானத்தில் வங்கதேசத்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியை எதிர்கொள்கிறது இந்திய அணி.

இந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் அதிக மழையைச் சந்தித்த மைதானங்களில் முதன்மையானது எக்பாஸ்டன் மைதானம். இதனால் இந்தியா - வங்கதேசம் இடையேயான போட்டியும் மழையால் பாதிக்கப்படுமா என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.

போட்டி நடைபெறும் வியாழன் அன்று 18 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும். மேலும் அன்றைய தினம் மழைக்கான வாய்ப்பு இல்லாமல் வெயில் நன்கு காயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேகமூட்டம் அவ்வப்போது தென்படும். ஆனால் வெயில்தான் பெரும்பாலும் கொளுத்தும். அன்றைய தினம் மழை பெய்யவோ சட்டென்று வானிலை மாறி ரசிகர்களைக் கடுப்பேற்றவோ வாய்ப்பில்லை என்கிற வானிலை ஆராய்ச்சி மையம். 

அப்பாடா, டக்வொர்த் லீவிஸ் கணக்குகள் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

10 கோடி பார்வைகளைப் பெற்ற கனிமா!

லாக்-அப் மரணம் அல்ல! கோவை காவல் நிலையத்தில் ஒருவர் மர்ம மரணம்! நடந்தது என்ன?

தொடர்ந்து 2-ம் நாளாக சரிவில் பங்குச் சந்தை!

மீண்டும் ரூ. 75,000 -ஐ கடந்தது தங்கம் விலை!

75 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT