செய்திகள்

தென் ஆப்பிரிக்க டி20 அணியின் உரிமையாளர் ஆன ஷாருக் கான்! 

எழில்

ஐபிஎல் போல தென் ஆப்பிரிக்காவிலும் டி20 குளோபல் லீக் என்றொரு டி20 லீக் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிக்கான அணிகளின் ஏலம் நேற்று நடைபெற்றது. 

இதில் டெல்லி ஐபிஎல் அணி உரிமையாளரான ஜி.எம்.ஆர். குழுமம், ஜோகன்னஸ்பர்க் அணியை வாங்கியது. அதேபோல கொல்கத்தா ஐபிஎல் உரிமையாளரான ஷாருக் கான் கேப் டவுன் அணியை ஏலத்தில் தேர்ந்தெடுத்தார். 

8 அணிகள் போட்டியிடும் இந்தப் போட்டி நவம்பர் - டிசம்பரில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கு உரிய வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் ஏலம் ஆகஸ்ட் 19 அன்று நடைபெறும். 

நட்சத்திர வீரர்களான ரபடாவும் டுமினியும் முறையே ஜோகன்னஸ்பர்க், கேப் டவுன் அணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

SCROLL FOR NEXT