தினேஷ் கார்த்திக் கடைசியாக 2014-ம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடினார்.
தோனி இந்திய அணியில் இருந்தபோது வாய்ப்பு மறுக்கப்பட்ட விக்கெட் கீப்பர்களில் தினேஷ் கார்த்திக்கும் ஒருவர். பேட்ஸ்மேனாக அவர் இங்கிலாந்தில் சாதித்து மேலும் பல வாய்ப்புகள் பெற்றாலும் அவரால் நிரந்தரமாக இந்திய அணியில் நீடிக்கமுடியவில்லை.
இப்போது உள்ளூர் போட்டிகளில் அசத்திக்கொண்டு வருகிறார். விஜய் ஹசாரே போட்டியில் 397 ரன்கள் எடுத்து 99.25 சராசரி பெற்றுள்ளார். ரஞ்சிப் போட்டியில் 704 ரன்கள் எடுத்து 54.15 சராசரி பெற்று கவனத்தை ஈர்த்துள்ளார். நல்ல ஃபார்மில் இருக்கும் கார்த்திக், இந்தியாவுக்காக ஆட விருப்பப்படுகிறார்.
இதுகுறித்து ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது: இந்திய அணிக்காக மீண்டும் விளையாடவேண்டும் என்று கனவு காண்கிறேன். ஒரு பேட்ஸ்மேனாகவே விளையாடமுடியும் என நினைக்கிறேன். இந்தியாவுக்காக நான் நெ.1 இடத்திலிருந்து நெ.7 வரை விளையாடியுள்ளேன். என்னுடைய ஆட்டம் முன்னேற்றம் அடைந்துள்ளது. இப்போது என்னுடைய இன்னிங்ஸை இன்னும் பக்குவத்துடன் சரியான ஸ்டிரோக்குகளுடன் அணுகுகிறேன். கீப்பிங்கில் சமீர் டிகேவுடன் இணைந்து பயிற்சி பெறுகிறேன். கீப்பிங்கிலும் என பலவீனங்களைக் கண்டடைந்து அதில் முன்னேற்றம் அடைந்துள்ளேன் என்கிறார்.
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சாம்பியன் டிராபி போட்டிக்கு கார்த்திக் தேர்வு செய்யப்படுவாரா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.