செய்திகள்

ஜூஹாய் சேலஞ்சர்: அரையிறுதியில் யூகி

ஜூஹாய் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

DIN

ஜூஹாய் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
சீனாவின் ஜூஹாய் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் காலிறுதியில் யூகி பாம்ப்ரியும், ஆர்ஜென்டீனாவின் அகஸ்டின் வெலாட்டியும் மோதினர். இந்த ஆட்டத்தில் யூகி பாம்ப்ரி 6-1, 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது வெலாட்டி களைப்பு காரணமாக போட்டியிலிருந்து விலகினார்.
இதையடுத்து காலிறுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட யூகி பாம்ப்ரி அரையிறுதிக்கு முன்னேறினார்.
இந்த சீசனில் முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் யூகி பாம்ப்ரி, அது குறித்து கூறியதாவது: அரையிறுதிக்கு முன்னேறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது மிகக் கடினமான போட்டியாகும். அதுவும் போட்டித் தரவரிசை கிடைக்காதபோது இன்னும் கடினமாகிவிடுகிறது. இதுவரை பெற்ற வெற்றிகளை மறந்துவிட்டு அரையிறுதி ஆட்டத்தின் மீது கவனம் செலுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்ஸ்ட்ராங் இறுதிச்சடங்குக்கு சென்றதுகூட சாதி ரீதியாகப் பார்க்கப்பட்டது!-Mallai Sathya | DuraiVaiko | Vaiko

வாக்குத் திருட்டு விவகாரம்: யாரும் தப்பிக்க முடியாது – ராகுல் காந்தி எச்சரிக்கை!

காரில் ஏற்ற மறுத்தாரா எடப்பாடி பழனிசாமி? செல்லூர் ராஜு விளக்கம்

உள்நோக்கத்துடன் செய்யப்பட்ட கொலை..! ஆசிப் குரேஷியின் மனைவி பேட்டி!

பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து!8ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி தொடரும்!அன்பில் மகேஸ் பேட்டி

SCROLL FOR NEXT